சர்வஜன வாக்கெடுப்புடனே புதிய அரசியலமைப்பு : லக்ஷ்மன் கிரியெல்ல 

Published By: Selva Loges

10 Feb, 2017 | 12:43 PM
image

புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதன் பிறகு மக்களின் ஆதரவை பெறுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பது அரசின் முதல் கடமை என்றும், அது குறித்த சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது இரண்டாவது கடமை என்று, சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.  

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பிற்குட்படுத்தப்பட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும். எனவும் அது தொடர்பான பொது தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்களுக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ள கருத்துக்களே அரசின் நிலைபாடா? என விமல் வீரவன்ச வினவிய கேள்விக்கு பதிலாகவே அவர் இதனை இதனை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசியுள்ள அவர் அரசியலமைப்பு திருத்தத்துக்கான யோசனைகளை கையளிக்குமாறு சகல கட்சிகளிடமும் கோரப்பட்டது. சில கட்சிகள் முன்வைத்துள்ளன. இன்னும் சில கட்சிகள் அவர்களது யோசனைகளை முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே, அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத்திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவேன். தேவையேற்பட்டால் மேலதிக சலுகைகளையும் ஏற்படுத்துவேன் என தெரிவித்திருந்தார். ஆனால் தம்மை பொறுத்தவரையில், 13ஆவது சட்டத்திருத்தம் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் திட்டமாகவே நடைமுறைப்படுத்தப்படும் மாறாக எவ்வித மேலதிக திணிப்புகளும் இடம்பெறாது என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13