குளியாபிட்டிய சாரனாத் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பங்குபற்றிருந்த மாணவன், இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

குளியாபிட்டிய சாரனாத் கல்லூரியில் உயர் தரத்தில் கல்விகற்கும் மாணவனே இவ்வாறு கடத்தப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் வாக்குமூலம் வழங்கியுள்ள மாணவன்,

வாகனமொன்றில் வந்த நபர்கள் தன்னை கடத்திச் சென்று தாக்கிய பின்னர் குளியாபிட்டிய நகரப் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் மூன்று நபர்களை பொலிஸார் இனங்கண்டுள்ளதாக குளியாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.