கடத்­திய தமி­ழர்­களை கொன்­ற­பின்னர் வேன் கடற்படை முகாமுக்குள் வைத்து துண்­டு­க­ளாக வெட்­டப்­பட்­டுள்­ளது : சி.ஐ.டி.மன்­றுக்கு அறி­விப்பு 

Published By: MD.Lucias

10 Feb, 2017 | 11:15 AM
image

கொட்­டாஞ்­சே­னையில் கடந்த  2009 ஆம் ஆண்டு கடத்­தப்­பட்டு காணாமல்போகச் ­செய்­யப்­பட்­ட­ வ­டிவேல் பக்­கி­ளி­சாமி லோக­நாதன், இரத்­ன­சாமி பர­மா­னந்தன் ஆகியோர் படு­கொலை செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும் அதனை மறைக்­கவே அவர்கள் பய­ணித்த வேனை வெலி­சறை கடற்­படை முகா­முக்குள் வைத்து துன்டு துன்­டாக வெட்­டி­யுள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர்.   

கடந்த 14 ஆம் திகதி இந்த விவ­காரம் தொடர்பில் கைது  செய்­யப்­பட்ட வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட லெப்­டினன் கொமாண்டர் தம்­மிக அணில் மாபா­வுக்கு மேல­தி­க­மாக இவர்கள் விரைவில் கைது  செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும்   குற்றப் புல­னா­யவுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணை பிரிவின் பொறுப்­ப­தி­காரி நிசாந்த டி சில்வா கொழும்பு மேல­திக நீதிவான் ஜெயராம் டொஸ்­கி­யிடம் நேற்று தெரி­வித்தார்

கடத்­தப்­பட்­டோ­ருக்கு சொந்­த­மான வேனில் குண்டு இருந்­த­தாக சந்­தேக நபர்கள் சார்பில் கூறப்­ப­டு­வது முற்­றிலும் உண்­மைக்கு புறம்­பா­னது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

தற்­போது கடற்­படை தலை­மை­ய­கத்தில் சேவை­யாற்றும் ரியல் அத்­மிரல் ஆனந்த குறுகே மற்றும் லெப்­டினன் கொமாண்டர் தயா­னந்த ஆகி­யோ­ரையே இவ்­வி­வ­கா­ரத்தில் விரைவில்  கைது செய்­ய­வுள்­ள­தாக பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா அறி­வித்தார்.

2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 11 ஆம் திகதி கொட்­டாஞ்­சே­னையில் இருந்து வெல்­லம்­பிட்­டிய பகு­தியை நோக்கி தனது பீ.ஏ.6023 என்ற இலக்­கத்தை உடைய வேனில் பய­ணித்த போது கடத்­தப்­பட்ட வடிவேல் பக்­கி­ளி­சாமி லோக­நாதன் மற்றும் உற­வி­ன­ரான பொரளை, வனாத்­த­முல்­லையைச் சேர்ந்த இரத்­ன­சாமி பர­மா­னத்தன் ஆகி­யோ­ரது கடத்தல் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­த­தது. 

இதன் போதே குற்றப் புல­னா­யவுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரியும் கடத்­தல்கள் தொடர்­பி­லான சிறப்பு விசா­ர­ணை­யா­ள­ரு­மான  பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா  இந்த விட­யங்­களை   நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

இதன் போது அவர் நீதிவான் ஜெயராம் டொஸ்­கி­யிடம் சிறப்பு மேல­திக அறிக்­கை­யொன்றை மன்­றுக்கு தாக்கல்  செய்தார்.

' கனம் நீதிவான் அவர்­களே,  முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரண்­ணா­கொட கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி தனது தனிப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ரான லெப்­டினன் கொமாண்டர் முன­சிங்க ஆரச்­சிகே தொன் நிலந்த சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக செய்த முறைப்­பா­டா­னது மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக முன்னாள் பொலிஸ் மா அதி­ப­ரினால் 2009 ஜூன் 10ம் திகதி பொலிஸ் மா அதி­பரால் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந் நிலையில் நாம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் சம்பத் முன­சிங்­கவின் கீழ் இருந்த கரண்­ணா­கொ­டவின் பாது­காப்பு அணியில் இருந்த  லெப்­டினன் கொமாண்டர் ஹெட்­டி­ஆ­ராச்சி முதி­யன்­ச­லாகே சந்­தன பிரசாத் ஹெட்டி ஆராச்­சியின் கீழான குழுவே இந்த கடத்­தல்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தமை தெரி­ய­வந்­தது.

எல­கந்த, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13, தெஹி­வளை - பெர்­ணான்டோ வீதி, கட்­டு­நா­யக்க விமான நிலையம் உள்­ளிட்ட பகு­தி­களில் இருந்து பல்­வேறு உக்­தி­களை பயன்­ப­டுத்தி இக்­க­டத்­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

சூசைப்­பிள்ளை அமலன் லியோன், ரொஹான் ஸ்டென்லி லியோன், கஸ்­தூரி ஆரச்­சிகே எண்டன், கஸ்­தூரி ஆரச்­சிகே ஜோன் ரீட், ரஜீவ் நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஷ்­வரம் ராம­லிங்கம், மொஹ­மட்­டிலான் ஜமால்டீன், சாஜித் மொஹம்மட், அலி அஸ்வர் அல்­லது ஹாஜியார் ஆகிய 11 பேர் கடத்­தப்­பட்டு திரு­கோ­ண­மலை கடற்­படை முகாம் வளா­கத்தில் உள்ள கடல் மற்றும் சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞான பீடத்தின் அருகே உள்ள கண்சைட் எனும் நிலத்­தடி சிறைக் கூட்டில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கொமாண்டர் ரண­சிங்க சுமித் ரண­சிங்க என்­ப­வரின் கீழ் இருந்த அந்த சிறையில் சட்ட விரோ­த­மாக மனித உரி­மைகள் மீறப்­படும் வண்ணம் இவர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந் நிலையில் கடந்த 2008 ஆகஸ்ட் 9ம் திகதி 38ஃ28 ரத்னம் வீதி கொட்­டாஞ்ச்­சேனை எனும் முக­வ­ரியைச் சேர்ந்த கஸ்­தூரி ஆராச்­சிகே ஜோன் ரீட் கடத்­தப்­பட்ட போது அவ­ரது 56 - 5536 எனும் டொல்பின் ரக வானும் எடுத்துச் செல்­லப்ப்ட்­டி­ருந்­தது. இந்த வேனா­னது கடற்­படை இலக்­கத்­த­கட்­டுடன் 6021 எனும் இலக்­கத்தின் கீழ் திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதனை புல­னாய்வுப் பிரி­வினர்  கடந்த 2015 நவம்பர் 18 ஆம் திகதி கைப்­பற்­றினர்.. தற்­போது அந்த வான் திரு­கோ­ண­மலை குற்றப் புல­னாய்வுப் பிரிவு அலு­வ­ல­கத்தில் உள்­ளது. இந்த வாக­னத்தின் கத­வுகள் வெலி­சறை கடற்­படை முகாமின் உளவுப் பிரி­வுக்கு சொந்­த­மான இர­க­சிய அறை ஒன்றில் இருப்­ப­தாக மேல­திக விசா­ர­ணை­களில் புல­னா­யவுப் பிரி­வுக்கு  தகவல் கிடைத்­தது. அதன்­படி  நீதி­மன்ற உத்­த­ரவைப் பெற்று அங்கு தேடுதல் நடத்­தினர்.

2016 ஆம் ஆண்டு  பெப்­ர­வரி 11 ஆம் திகதி நாம் செய்த சோத­னையில் 72 துண்­டு­க­ளாக பிரிக்­கப்­பட்ட வாகனம் மீட்­கப்­பட்­டது. அத்­துடன் அந்த அறையில் சீ.ஜீ 125 ஈ - 1810450 எனும் எஞ்சின் இலக்­கத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. 37வது துண்டில் இருந்து வான் ஒன்றின் செஸி இலக்கம் இர­சா­யன பகுப்­பாய்வு மூலம் கண்­ட­றி­யப்­பட்­டது. அதுவே காணாமல் போன வடிவேல் லோக­நாதன் என்­ப­வ­ருக்கு உரி­யது என்­பது அப்­போதே தெரி­ய­வந்­தது. 

இத­னை­ய­டுத்தே கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­விடம் இருந்த  லோக­நாதன் மற்றும் அவ­ருடன் வேனில் வெல்­லம்­பிட்டி நோக்கி பய­ணிக்கும் போது காணாமல் போன ரத்­ன­சாமி ஆகியோர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை புல­னாய்வுப் பிரி­வினர் ஆரம்­பித்­தனர்.

இதன் போது பர­மா­னந்தன் பயன்­ப­டுத்­திய தொலை­பே­சியில் 0773952046 எனும் இலக்க சிம் அட்டை உட்­செ­லுத்­தப்­பட்டு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை எமி இலக்கம் ஊடாக கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அந்த கைய­டக்கத் தொலை­பே­சி­யா­னது பஸ் ஒன்றில் விழுந்து கிடந்­த­தாக கூறி கடற்­படை வீரர் ஒரு­வ­ரினால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.  அதனை இவ்­வாறு வேறு இலக்­கத்தில் பயன்­ப­டுத்­தி­யவர் தற்­போ­தையை லெப்­டினன் கொமாண்டர் தயா­நந்த என்­பது எமது விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­தது.அதற்கு மேல் அந்த விசா­ரணை இடம்­பெ­றாது அவை மூடி மறைக்­கப்­பட்­டுள்­ளன. என்­பது புல­னாய்வுப் பிரி­வி­னரால் கண்­ட­றி­யப்­பட்­டது. அது தொடர்பில் அப்­போது உப பொலிஸ் பரி­சோ­தகர் விஜே­சிங்க முன்­னெ­டுத்­தி­ருந்த  நிலையில் அது தொடர்பில் நாம் அவ­ரிடம் வாககு மூலம் பதிவு செய்தோம்.  இத­னை­விட விஜே­சிங்­கவின் மேல­தி­கா­ரி­யாக அப்­போது கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் (சி.சி.டி.) 3 ஆம் இலக்க விசா­ரணை அறையின் பொருப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் பிரி­யங்­க­ர­வி­டமும் நாம் வாககு மூலம் பெற்றோம்.

பொரளை, கொட்­டாஞ்­சேனை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரின் ஆரம்ப விசா­ர­ணைகள் உரிய முறையில் இடம்­பெ­ற­வில்லை. அவர்­களும் பொறுப்­பற்று செயற்­பட்டு தக­வல்­களை மறைத்­துள்­ளனர். வடிவேல் பக்­கி­ளி­சா­மியின் தொலை­பே­சியை வெலி­சறை முகாமில் புல­னாய்வுப் பிரிவில் கட­மை­யாற்­றிய லெப்­டினன் கொமாண்டர் தொன் சுமேத சம்பத் தயா­னந்த என்­ப­வரே கண்­டெ­டுத்து கொடுத்­துள்­ள­மையும் அவ­ருக்கும் அவ­ரது குழு­வுக்கும் தெரிந்தே இவரின் கடத்தல் இடம்­பெற்­றுள்­ள­மையும் புல­ன­ய­வா­ளர்­களால் கண்­ட­றி­யப்­பட்­டது. அப்­போது காணாமல் போனோரின் தொலை­பேசி இலக்கம் ஊடாக இக்­க­டத்தல் தொடர்பில் பொலிசார் தக­வல்­களை வெளிப்­ப­டுத்தி கடற்­படை வீரர் ஒரு­வரை கைது செய்­யவும் தயா­ரா­கி­யுள்­ளனர். 

அதா­வது காணாமல் போன­வரின் கைய­டக்கத் தொலை­பே­சியை பொலி­சா­ரிடம் ஒப்­ப­டைத்­த­வ­ரையே கைது  செய்ய முனைந்­துள்­ளனர். இதன் போது அப்­போது கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பா­ள­ராக இருந்த அதி­கா­ரியால் முட்­டுக்­கட்டை ஏற்­ப­டுத்­தப்ப்ட்டு ஒரு கட்­டத்தில் அதனை ஆராய வேண்டாம் என உத்­தர்வும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

 இத­னை­ய­டுத்து இது தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை ஆரம்­பித்த நாம் நேற்று முன் தினம், லோக­நா­தனின் வேனை 72 துண்­டு­க­ளாக வெட்­டி­ய­தாக நம்­பப்­படும் சந்­தேக நபர் கடற்­படை லெப்­டினன் கொமாண்டர் தம்­மிக அணில் மாபா வைக் கைது செய்தோம். முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் அவரே வேனை துண்டு துன்­டாக வெட்­டி­யதை ஒப்­புக்­கொன்­டுள்ளார்.

 வெலி­சறை முகா­முக்கு முன்­பாக அவ்வேன் இருக்கும் போது, தனக்கு கெப்டன் குருகே அவ்­வேனில் குண்­டுள்­ள­தாக கூறி சோதனை  செய்யச் சொன்­ன­தா­கவும் அதற்­கா­கவே அதனை துண்டு துண்­டாக வெட்­டி­ய­தா­கவும் அவர் ஒப்­புக்­கொண்டார். 

 நாம் அந்த வெலி­சறை முகா­முக்கு சாட்­சி­யா­ளர்கள் 5 பேரை அழைத்து சென்ற போது அங்­கி­ருந்த மோட்டார் சைக்கிள் ஒன்­றினை அவர்கள் அடை­யாளம் கண்­டனர்.

 வேனில் குண்டு இருந்­த­தாக கூறப்­ப­டு­வது முற்­றிலும் உண்­மைக்கு புறம்பானதாகும். அதில் குண்டு இருந்ததா என பரிசோதிக்க வெளியில் இருந்த வேனை முகாமுக்குள் கொண்டுசென்றுள்ளனர். இது முற்றிலும் வேடிக்கையானது. அத்துடன் இது குறித்து யாருக்கும் அறிவிக்கவில்லை. அத்துடன் குண்டு இருந்திருப்பின் அதனை கொன்டுவந்தவர்களை யேன் 8 வருடமாகியும் தேடவில்லை. 

கடத்தியவர்களை கொலை செய்துவிட்டு அதனை மறைக்கவே வேனை முகாமுக்குள் எடுத்து துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். கடத்தப்பட்டவர்களது உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன., தொலைபேசிகள் கடற்படையின் பலரால் பயன்படுத்தப்பட்டுள்ளன. தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

 இந்த குற்றம் தொடர்பில் அனைவரும் கைது செய்யப்படுவர் என்றார்.

இதனையடுத்தே சந்தேக நபரான லெப்டினன் கொமாண்டர் தம்மிக அணில் மாபாவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் ஜெயராம் டொஸ்கி உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35