ஹட்டனில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - 5 பேர் படுங்காயம்

Published By: Raam

10 Feb, 2017 | 09:50 AM
image

நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து அட்டன் டிக்கோயா பகுதியை நோக்கி ஆலய திருவிழா ஒன்றுக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து இன்று அதிகாலை 1 மணியளவில் டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியை சேர்ந்த ராஜரட்ணம் 55 வயது மதிக்கதக்கவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து டிக்கோயா பகுதியில் இடம்பெறவிருந்த திருவிழாவை கண்டுகளிக்க வந்து டிக்கோயா வனராஜா பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்லும் வேளையில் டிக்கோயா தொழிற்சாலை கொங்கிறீட் பாதையில் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 6 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் 4 ஆண்கள் ஒரு சிறுவன், ஒரு பெண் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

படுங்காயம்பட்டவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழந்தவரின் சடலம் குறித்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37