Fresenius Kabi தனது உள்நாட்டு பங்காளரான மலாக்கி ஹோல்டிங்ஸ் (Markss HLC பிரைவட் லிமிட்டெட்டின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் இயங்கும் அங்கத்துவ நிறுவனம்), உடன் இணைந்து பெண் நோயியல் புற்றுநோய் இனங்காணல் தொடர்பான விழிப்புணர்வை Sri Lanka Gynecological Cancer Society and Colposcopy and Cervical Pathology Association இல் அறிமுகம் செய்திருந்தது.

இந்த அறிமுக நிகழ்வு சினமன் லேக்சைட், கொழும்பு ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் British Society for Colposcopy and Cervical Pathology (BSCCP) இன் தலைவர் பேராசிரியர் எம்.ஈ.குருயிக்ஷாங்க், பேராசிரியர். ஜோன் டைடி (BSc, MD, FRCOG) President-Elect of the British Society for Colposcopy and Cervical Pathology (BSCCP), President elect of the British Gynecological Cancer Society Consultant Gynecologist/ Gynecological Oncologist UK வைத்தியர்.அன்டி நோர்டின் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

 

Fresenius Kabi என்பது பெண்களில் ஏற்படும் புற்றுநோய் தொடர்பில் சிகிச்சைகளை வழங்க அவசியமான மருந்துகள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்வதுடன், தீவிர பராமரிப்புகளை வழங்குவது தொடர்பில் சர்வதேச ரீதியில் தற்போது ஈடுபட்டு வருகிறது. தமது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளின் ஓரங்கமாக, Sri Lanka Gynecological Cancer Society and Colposcopy and Cervical Pathology Association இனால் முன்னெடுக்கப்படும் பல செயற்பாடுகளுக்கு உதவிகளை வழங்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது. 

மலாக்கி ஹோல்டிங்ஸ் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த செறய்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குவதையிட்டு தமது நிறுவனம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். British Society for Colposcopy and Cervical Pathology இன் தலைவர் பேராசிரியர் எம்.ஈ. குருயிக்ஷாங்க்  பெண் பிறப்பு உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். 

Sri Lanka Gynecological Cancer Society and Colposcopy and Cervical Pathology Association  இன் ஸ்தாபகரும், தலைவருமான வைத்தியர். கனிஷ்க கருனாரட்ன இந்த நிகழ்வில் உரையாற்றும் போது, Sri Lanka Society for Colposcopy and Cervical Pathology உடன் கைகோர்த்து செயலாற்றுவதன் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்திருந்ததுடன், அதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்ய முடியும் என்றார்.