வசந்த சொய்சாவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான எஸ்.எப்.லொக்கா என அழைக்கப்படும் ஈவோன் ரணசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உத்தரவினை வடமத்திய மாகாண நீதவான் மஞ்சுல திலகரத்ன இன்று  (09)பிறப்பித்துள்ளார்.

பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான பிரபல கராத்தே வீரரான வசந்த சொய்சா கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு அவரது களியாட்ட விடுதியில் கடந்த வருடம் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.