அம்பாந்தோட்டை அகுனுகொலபெலச என்ற பகுதியில் 58 ஏக்கர் நிலப்பரப்பில் 4 ஆயிரத்து 996 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சிறைச்சாலையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி குறித்த சிறைச்சாலையின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இச் சிறைச்சாலையில் இரண்டாயிரம் கைதிகளை சிறை வைக்கும் வசதி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் புதிய சிறைச்சாலையில் ஒரு வைத்தியசாலையில்,தொழிற்கல்வி பயிற்சி மையம், கைத்தொழிற்காக தனியொரு கட்டிடம், அதிகாரிகளுக்காக 140 தங்குமிடங்கள் மேலும் நான்கு ஆயிரம் மீற்றர் நீளமான ஓடுபாதை , 25 மீற்றர் நீளமுடைய உள்ளகரங்க நீச்சல் குளம்  மற்றும் சிறை கைதிகளால் வடிவமைக்கபட்ட பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.