உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் போட்டிகள் ஜெர்மனியில் நான்காவது அத்தியாயம் 

Published By: Priyatharshan

04 Jan, 2016 | 03:44 PM
image

உலகத் தமிழர் பூப்­பந்­தாட்ட (பாட்­மின்டன்) சம்­மே­ள­னத்­தினால் இவ் வருடம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள நான்­கா­வது உலகக் கிண்ணப் பூப்­பந்­தாட்டப் போட்­டிகள் ஜெர்­ம­னியில் எதிர்­வரும் மார்ச் மாதம் 26ஆம், 27ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளன.

சுவிட்­சர்­லாந்தில் 2013இல் ஸ்தாபிக்­கப்­பட்ட உலகத் தமிழர் பூப்­பந்­தாட்ட சம்­மே­ளனம், அவ் வரு­டத்­தி­லி­ருந்து ஆண்­டு­தோறும் உலகக் கிண்ணப் பூப்­பந்­தாட்டப் போட்­டி­களை நடத்­தி­வ­ரு­கின்­றது. இப் போட்­டிகள் தமி­ழர்கள் பரந்து வாழும் நாடு­க­ளி­லேயெ நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

சுவிட்­சர்­லாந்து, பிரான்ஸ், இங்­கி­லாந்து ஆகிய நாடு­களைத் தொடர்ந்து நான்­கா­வது அத்­தி­யாயம் ஜெர்­ம­னியில் அரங்­கேற்­றப்­ப­ட­வுள்­ளது.

டசல்டோர்வ் நக­ருக்கு அண்­மையில் அமைந்­துள்ள விலிச் 47877, ஷீவ்­பாஹ்னர் ஸ்ட்ராசெ 10 என்ற முக­வ­ரியில் அமைந்­துள்ள ஜேக்கப் ஃப்ரான்ட்ஸென் அரங்கில் இப் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

12 வய­துக்­குட்­பட்ட சிறுவர், சிறு­மியர், 16 வய­துக்­குட்­பட்ட இளைஞர், யுவ­திகள் ஆகி­யோ­ருக்­கான ஒற்­றையர், இரட்­டையர் போட்­டிகள், 20 வய­துக்­குட்­பட்ட இளை­ஞர்­க­ளுக்­கான ஒற்­றையர் போட்­டிகள் என்­பன நடை­பெ­ற­வுள்­ளன.

இத­னை­விட சிரேஷ்ட பிரிவில் 40, 50, 60 வய­துக்கு மேற்­பட்ட ஆண்­க­ளுக்­கான ஒற்­றயைர், இரட்­டையர் போட்­டிகள், 30 வய­துக்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்­கான ஒற்­றையர், இரட்­டையர் போட்­டிகள், 40 வய­துக்கு மேற்­பட்ட கலப்பு இரட்­டையர் போட்­டிகள் என்­ப­னவும் நடத்­தப்­படும்.

அத்­துடன் பணப்­ப­ரி­சு­களைக் கொண்ட ஆண், பெண் இரு­பா­லா­ருக்­கு­மான பகி­ரங்க ஒற்­றையர், இரட்­டையர், கலப்பு இரட்­டையர் போட்­டி­களும் நடை­பெறும்.

இப் போட்­டி­களில் பங்­கு­பற்ற விரும்­புவோர் www.wtbf.net எனும் இணை­யத்­த­ளத்­தி­னூ­டாக விண்­ணப்பப் படி­வங்­களைப் பெற்று விண்­ணப்­பிக்க முடியும். இப் போட்­டி­களில் இலங்­கை­யி­லி­ருந்து பங்குபற்ற விரும்புவோர் உலகத் தமழிர் பூப்பந்தாட்ட சம்மேனத்தின் இலங்கை பிரதிநிதி கமலன் என்பவரை 077 8869000 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35