அம்பலங்கொட, இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான  சந்தேக நபர் உட்பட இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஹிக்கடுவை - பெரூலிய பகுதியில் காரொன்றில் சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபருக்கு 28 எனவும், மற்றையவருக்கு 22 வயதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களிடமிருந்து டீ 56 ரக துப்பாக்கி, மைக்ரோ ரக துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளது.

அம்பலங்கொட – இடம்தொட்ட பிரதேசத்தில் காணிப் பிரச்சினை ஒன்றின் காரணமாக,  கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.