மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீட்டை, அவரது நினைவில்லமாக மாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும், இது பொதுமக்களின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் பதவியைக் குறிவைத்திருக்கும் சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த அதிரடி இது என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தசாப்தங்களாக போயஸ் தோட்டத்திலேயே குடியேறிவிட்ட சசிகலாவை அங்கிருந்து விரட்டும் வகையிலேயே இந்த அறிவிப்பை பன்னீர்செல்வம் விடுத்துள்ளார்.