பலாத்காரமாக மசாஜ் செய்து கொண்ட பொலிஸ் அதிகாரி

Published By: Raam

09 Feb, 2017 | 09:41 AM
image

 மசாஜ் நிலையம் எனும் பெயரில் இயங்கும் விப­சார விடு­தி­களை பொலிஸார் சுற்­றி­வ­ளைக்கும் நட­வ­டிக்­கை­க­ளி­டையே, பலவந்த­மாக உடற்பிடிப்பு நிலை­யத்தில் (மசாஜ் நிலையம்) உடற்­பி­டிப்பு செய்­து­கொண்ட  புத்­தளம் பொலிஸ் பிராந்­தி­யத்தில் சேவை­யாற்றும் உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வவர் கைது செய்யப்பட்டு  கடும் நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் பிணையில் செல்ல நீர்­கொ­ழும்பு நீதிவான் நீதி­மன்றம் அனுமதியளித்தது. 

நீர்­கொ­ழும்பு பொலி­ஸாரால் கைது  செய்­யப்­பட்டு ஏற்­க­னவே விளக்­க­ம­றி­யலில் இருந்த நிலை­யி­லேயே அவ­ருக்கு நீர்­கொ­ழும்பு நீதிவான் ருச்­சிர வெலி­வத்த கடும் நிபந்­த­னையில் பிணை­ய­ளித்­துள்ளார்.

இந்த சம்­பவம் குறித்து மேலும் தெரியவ­தா­வது,

 புத்­தளம் பொலிஸ் பிராந்­தி­யத்தில் உயர் பத­வியில் சேவை­யாற்றும் பொலிஸ் பரி­சோ­தகர் தர அதி­கா­ரி­யான மேற்­படி சந்­தேக நபர் நீர்­கொ­ழும்பில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்­றுக்கு சென்று அங்கு பணம் செலுத்­தாது பலாத்­கா­ர­மாக மசாஜ் செய்­து­கொண்டு வந்­துள்ளார். 

இந் நிலை­யி­லேயே அது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்­பாட்­டுக்கு அமை­வாக அவரை பொலிஸார் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்­தி­ருந்த நிலையில் அவர் சில நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார். 

இந் நிலையில் வழக்­கா­னது மீள விசா­ர­ணைக்கு வந்தபோது, சந்­தேக நப­ரான பொலிஸ் அதி­காரி எத்­தனை முறை இவ்­வாறு பலாத்­கா­ர­மாக இவ்­வாறு மசாஜ் செய்து கொண்டார். என நீதிவான் ருச்­சிர வெலி­வத்த பொலி­ஸா­ரிடம் கேள்வி எழுப்­பினார். இதன்போது வழக்கை நெறிப்­ப­டுத்­திய நீர்­கொ­ழும்பு பொலிஸ்  நிலை­யத்தின் சார்ஜன்ட், சந்­தேக நபர் 5 முறை இவ்­வாறு பலாத்­கா­ர­மாக மசாஜ் ­செய்­து­ கொண்­டுள்­ள­தாக குறிப்­பிட்டார்.

 இந் நிலையில் பொலிஸ் அதி­கா­ரியை கடு­மை­யாக எச்­ச­ரித்த நீதிவான் அவரை இரு சரீரப்பிணைகளில் விடுவித்ததுடன் சாட்சியாளர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் அச்சுறுத்தல் விடுத்தால் பிணையை ரத்துச் செய்வதாக எச்சரித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44