இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை புகையிலை அக்கறைப்பற்று பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த களஞ்சியசாலை வைத்து கைப்பற்றிய  புகையிலை தொகை சந்தைப் பெறுமதி சுமார் 3 கோடிக்கும் அதிகமென, மட்டக்களப்பு சுங்க திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் சுங்க திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செயப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.