(பா.ருத்ரகுமார்)

பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்ட பேபச்சுவல் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களின் சில பகுதிகளை வரையரை செய்வதற்கு மத்திய வங்கியின் நிதிச் சபை தீர்மானித்துள்ளதாகவும் இதற்கென இரு உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

மேலும் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பிணைமுறி மற்றும் முன்னாள் ஆளுனர் தொடர்புடைய சில ஆவணங்கள் கசிந்துள்ளது என்பதிலும் மத்திய வங்கிக்குள்ள உள்ளவர்கள் அதனை வெளியிடுகின்றார்கள் என்பதிலும் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்ககொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.