தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று துணிச்சலாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்தார். இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகளின் வெறுப்பால் மாணவர்களும் இளைஞர்களும் தமிழகத்திற்கு இழுக்கு நேர்ந்தால் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

அதுமாத்திரமின்றி சசிகலா தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்கும் பட்சத்தில் மெரினாவுக்கு வந்து போராட வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர்.

இதன்போது சசிகலாவுக்கு ஆதரவாக நின்ற தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தை, ”மிக்சர் பன்னீர் செல்வம்” என சமுக வளைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

எனினும் தனக்கு நேர்ந்த அவமானங்கள் தொடர்பில்  நேற்று மெரினாவில் பன்னீர் செல்வம் கருத்து வெளியிட்டதையடுத்து, பன்னீர் செல்வத்தை “மிக்சர் பன்னீர் செல்வம்” என்று தெரிவித்தமைக்கு, சமூக வலைதளங்களில் மன்னிப்பு கோரி வருகின்றனர்.