மஹிந்தவை கொல்ல திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் விடுதலை.!

Published By: Robert

08 Feb, 2017 | 04:35 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

2009ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட, மூன்று ஊடகவியலாளர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  

ஊடகவியலாளர்களான தயா வெத்தசிங்க, ரவீந்தர புஸ்பகுமார மற்றும் சாலித விமலசேன ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்ப்ட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறவினரான துஷித ரணவக்கவுக்கு சொந்தமான தெனியாய - நாதகல பகுதி வீட்டுக்காக, மஹநெகும திட்டத்தின் வளங்கள் பயன்படுத்தப்பட்டதாக, கூறப்படும் செய்திக்காக, புகைப்படங்கள் மற்றும் செய்திகளை சேகரித்து வந்து கொண்டிருந்த வேளை இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 2ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது. 

அப்போது அரச ஊடகங்களில் "ஜனாதிபதியை கொல்ல முயன்ற சதி தொடர்பிலான சந்தேகநபர்கள்" என அடையாளப்படுத்தப்பட்ட இவர்கள், பின்னர் பயங்கரவாத  புலனாய்வுப் பிரிவினரால் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து, மொரவக்க நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவர் மீதும், தனியார் காணியில் அத்துமீறி நுழைய முற்பட்டமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. 

எது எவ்வாறு இருப்பினும், நீண்ட விசாரணைகளின் பின்னர் இன்று, இந்த வழக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

இதற்கமை, குறித்த மூன்று ஊடகவியலாளர்களும் போதிய சாட்சிகள் இன்மையாளும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியாமையினாலும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51