சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக வடக்கு மாகாண வைத்தியர்கள், வைத்திய பீட மாணவர்கள் ஒன்றிணைந்து  இன்று பிற்கபல் 1 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

 ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிலிருந்து பேரணியாக இலுப்பையடி, பசார் வீதி வழியாக மத்திய பஸ் நிலைத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், நீதிமன்றம் வீதி வழியாகச் மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்துள்ளனர்.

இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னிட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக கறுப்பு கொடி அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியர்கள் தமது உடையில் கறுப்புப்பட்டி அணிந்திருந்து தமது கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா? போலி சைட்டம், வைத்தியர்கள் மிக விரைவில் வவுனியா வைத்தியசாலையில், வைத்தியசாலையின் இதயம் இலங்கை வைத்திய கல்லூரியைக் காப்போம், போலி பட்டம் விற்கும் சைட்டத்னை மூடு,போன்ற வாசகங்களை தாங்கியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.