தினேஸ் சந்திமல் மீண்டும் தனது சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவதற்கு சில தினங்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தினேஸ் சந்திமல் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது அனவரும் அறிந்த விடயம். அவருக்கு நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டமையானது மிகவும் கடினமான தீர்மானமாகும். ஏனெனில் அணியில் இடம்பிடித்துள்ள அனுபவம் வாய்ந்த வீரர் அவர் மட்டும்தான்.

எனினும் அவரது துடுப்பாட்டம் கடந்த சில போட்டிகளில் சிறப்பானதாக அமையவில்லை. இதனால் அவருக்கு சில நாட்களுக்கு ஓய்வளிப்பது சிறந்த விடயம்.

இதன்மூலம் அவர் தன்னை வலுப்படுத்திக்கொண்டு, ஆஸி அணிக்கெதிரான தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுப்படுத்துவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினேஸ் சந்திமல் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான சாத்தியங்கள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.