தன்னை விஷம் வைத்து கொன்று விடுவார்கள் என ஜெயலலிதா தெரிவித்தார் : மனோஜ் பாண்டியன் திடுக்கிடும் தகவல்

Published By: MD.Lucias

08 Feb, 2017 | 12:03 PM
image

தன்னை விஷம் வைத்து கொன்று விடுவார்களோ என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா   அச்சமுற்றதாக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். ஜெயலலதா இறந்து 25 நாளில் பொதுச் செயலாளர், 60 நாளில் முதல்வர் என்ற எண்ணம் கொண்ட சசிகலா, ஜெயலலிதாவிடம் எவ்வாறு அன்பாக இருந்திருக்க முடியும்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள மனோஜ் பாண்டியன்,

மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளதாவது,

 2011 டிசம்பர் 19ஆம் திகதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தலைமை செயலகத்தில் 45 நிமிடம் என்னிடம் ஜெயலலிதா பேசினார். அப்போது, நான் முதல்வராக இருக்கிறேன். ஒரு பெருங்கூட்டம் முதல்வர் பதவியில் இருந்து நீக்க சதி செய்கிறது. அவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற போகிறேன் என்றார். அதனை தொடர்ந்து சில நாட்களில் அந்த நபர்களை கட்சியிலிருந்தும் வீட்டிலிருந்தும் நீக்கினார். அதன் முதல் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் என்ற முறையில், கட்சிக்கு தேவையான ஆலோசனை வழங்கினேன். 

மறக்க மாட்டேன்:

மார்ச் 30 ஆம் திகதிக்குப் பிறகு, சசிகலா மன்னிப்பு கடிதம் கேட்டு மீண்டும் உள்ளே வந்தார். அவர் ஜெயலலிதாவின் ஆசி பெற்று உள்ளே சென்றார். அப்போது 5 பேரை மாடிக்கு ஜெயலலிதா அழைத்தார். அதில் நானும் ஒருவன். அப்போது என்னிடம், அவர்களை அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன். பெங்களூருவில் அவர்கள் செய்த சதியை மறக்கவில்லை. ஆனால், எனக்கு ஒரு உதவியாளர் தேவை. அதனால் அவர்களை நான் அனுமதித்தேன்.

பிறகு, துக்ளக் ஆசிரியர் சோவையும், என்னையும் அழைத்த ஜெயலலிதா, எனக்கு பயமாக உள்ளது. இந்த கும்பல் என்னை விஷம் வைத்து கொன்றுவிடுவார்கள் என்ற பயமாக உள்ளது என்றார்.

அதற்கு, 1.5 கோடி தொண்டர்களும் உங்களுக்கு சொந்தமானவர்கள். மக்கள் உங்களை பாதுகாப்பார்கள். உங்களுக்கு அச்சுறுத்தல் வராது எனக்கூறினேன். 

அதிகாரம் வழங்கவில்லை:

தற்போது அதிமுக சட்டவிதி 19 - 8 என்ற விதியின் கீழ் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்ததாக கூறுகின்றனர். அதிமுகவின் கொள்கைகளை வகுப்பது தான் பொதுக்குழு. அது தொண்டர்களை கட்டுபடுத்தும் என சொல்லப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தற்போது அவர்கள் பொது செயலாளராக தேர்வானதாக கூறுகின்றனர். 20 - 2 என்ற விதியில் பொது செயலாளர் என்பவர், தொண்டர்களால் மட்டும் தேர்வு செய்யப்பட முடியும்.

தற்காலிக பொதுச் செயலரை தேர்வு செய்யக்கூடிய எந்த அதிகாரமும் வழங்கவில்லை. சட்ட விதிகள் 205 என்ற விதிப்படி, பொதுச் செயலர் பதவியில் யாரும் இல்லை என்றாலும், தற்காலிகமாக தேர்வானவர் நிரந்தரமாக தேர்வு செய்யப்படுவார் என்பது விதி. ஜெயலலிதா, சசிகலாவை உள்ளூராட்சி சபை உறுப்பினராக கூட நியமித்தது இல்லை.

நினைவு இல்லம்:

போயஸ் கார்டன் அதிமுக தொண்டர்களுக்கு கோயில் போன்றது. அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பது தான் தொண்டர்களின் எண்ணம். போயஸ்கார்டன் வீடு, விருது, கார் ஆகியவற்றை நினைவாக, தமிழக மக்கள், தொண்டர்கள் வணங்க வேண்டும் என்பதற்காக நினைவகம் அமைக்க வேண்டும் .

25 நாளில் பொது செயலாளர், 60 நாளில் முதல்வர் என்ற எண்ணம் கொண்ட சசிகலா ஜெயலலிதாவிடம் எப்படி அன்பாக இருந்திருக்க முடியும்? ஆசையில்லாதவர்களாக இருக்க முடியும்? ஜெயலலிதாவுடன் ராஜம் என்பவர் தான் நீண்ட வருடம் உள்ளார். அவர் ஜெயலலிதாவின் 13 வயதில் இருந்து மரணமடையும் வரை ஜெயலலிதாவுடன் தான் உள்ளார். அவர் தான் தாயாக உள்ளார்

மக்கள் அனைவரின் விருப்பத்திற்கு மாறாக நடக்கிறது. தொண்டர்களை வஞ்சித்தும் நடக்கிறது. பொருளாதார குற்றங்கள் செய்தவர்கள் நாடாண்டால் என்னாகும். இவர்கள் முதல்வராக தமிழகத்தை எங்கு கொண்டு செல்வார்கள். மக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

தற்காலிக பொது செயலாளருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்க கூட அதிகாரம் கிடையாது. நிர்வாகிகள் யாரையும் நீக்கவும் முடியாது. நியமிக்கவும் முடியாது. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு என்பது கூட தேர்தல் ஆணையம் முன்பு கேள்விக்குறியாக உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47