தென் மாகாணத்தில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும், மிகவும் பிரபல்யமான மற்றும் மாபெரும் விற்பனைக் கண்காட்சியான காலி பருவ காலம் 2015 உடன், நாட்டின் முன்னணி திரவ பெற்றோலிய வாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்கும் லிட்ரோ காஸ் இணை பங்காளராக கைகோர்த்திருந்தது. 

காலி நகரின் பாரம்பரிய முக்கியத்துவங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் இந்த விற்பனைக் கண்காட்சி நிகழ்வு, 2015 டிசம்பர் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற்றது. 

ஐந்து நாட்கள் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது இசைக் கச்சேரிகள், திரைப்படக் காட்சிகள், கலாசார நிகழ்வுகள், நாடகங்கள் மற்றும் ஃபஷன் காட்சி நிகழ்வுகள் போன்றன நடைபெற்றன. 

இவற்றின் மூலம் பார்வையாளர்களுக்கு மனது மறக்காத அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.

லிட்ரோ காஸ் நிறைவேற்று தலைவர் ஷலீல முனசிங்க கருத்து தெரிவிக்கையில், 

“நாட்டின் தேசிய திரவ பெற்றோலிய வாயு விநியோகஸ்த்தர் எனும் வகையில், தென் மாகாண ஆளுநர் செயலகத்துடன் இணைந்து காலி பருவ கால நிகழ்வுக்கு இணை அனுசரணை வழங்குவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்தார்.

விவசாய, வணிக மற்றும் சிறியளவு துறைகளுக்கு தமது தொழில் முயற்சியாண்மை ஆக்கங்களை காட்சிப்படுத்துவதற்கான பகுதியாக காலி சமனல மைதானம் அமைந்திருந்தது, விஞ்ஞான ரீதியான தாவர இனம், அலங்கார தோட்டக்கலை, சேதன விவசாயம் மற்றும் கால்நடை போன்றன தொடர்பான கண்காட்சி தர்மபால மைதானத்தில் இடம்பெற்றது. இதற்கு மேலாக, ஏற்றுமதி சார் விவசாய, வாசனைத் திரவியங்கள் மற்றும் நிலத்தோற்றத்துக்கான காட்சிகளும் நடைபெற்றன.

பாரம்பரிய கார்களை உள்ளடக்கிய வாகன அணிவகுப்பும் இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புகழ்பெற்ற படையணியினரின் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வாத்திய நிகழ்வுகள், வாசனைத்திரவியங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் சந்தைகள் மற்றும் மேலும் பல கண்காட்சிகளான கலை, கைவண்ணப் பொருட்கள், தொல்பொருட்கள், புகைப்படங்கள், தொலைப்பொருள் காட்சியகங்கள், பாரம்பரிய நாடா பின்னல்கள், மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள், பொம்மை காட்சிகள், புத்தகங்கள் போன்றனவும் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தென் மாகாண ஆளுநர் கலாநிதி. ஹேமகுமார நானயக்கார கருத்து தெரிவிக்கையில், 

“காலி பருவ காலம் 2015 மூலமாக திரட்டப்படும் நிதி, காலி கோட்டை பகுதியில் அமைந்துள்ள நூலகத்தின் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். 

இலங்கையில் 1832 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மிகவும் பழமையான நூலகமாக இது அமைந்துள்ளது. அத்துடன் காலி கோட்டை பகுதியில் அமைந்துள்ள பழைய தபால் நிலைய கட்டிடத்தில் காணப்படும் அறிவூட்டல் மற்றும் கலாசார தொகுதியின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் நிதியின் ஒரு பகுதி பயன்படுத்தப்படவுள்ளது” என்றார்.

இலங்கையின் பழமையான வணிக நகரமாக காலி கருதப்படுகிறது. குறிப்பாக ஆதி காலத்தில் உலகளாவிய ரீதியிலிருந்து வர்த்தகர்கள் இந்த நகருக்கு விஜயம் செய்து சர்வதேச வியாபாரங்கள் மற்றும் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். 

இதற்கு இந்நகரின் துறைமுகம் மிகவும் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது. பல இயற்கை அம்சங்களை இந்;நகரம் கொண்டுள்ளதுடன், பல புலமைச்சொத்துக்கள், தேசிய வீரர்கள், கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமையையும் இந்நகரம் கொண்டுள்ளது. 

சுமார 70 ஆண்டுகளுக்கு முன்னதாக காலி பருவகால நிகழ்வுகள் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டமைக்கு வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. பல தசாபத்தங்களின் பின்னர் இம்முறை நிகழ்வு, தென் மாகாண ஆளுநர் கலாநிதி. ஹேமகுமார நானயக்காரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் ஈடுபாடும் கிடைத்திருந்தது. காலி பருவகால நிகழ்வுகள் தென் மாகாணத்தின் ஆளுநர் செயலகத்தின் மூலமாகவும், தென் மாகாண சபை மற்றும் காலி கோட்டை நூலகம் மற்றும் காலி மாவட்ட செயலாளர், தென் மாகாண செயலாளர் நாயகம் மற்றும் காலி நகர பிதா ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்பார்வை செயற்திருந்தனர்.

இலங்கையில் திரவ பெற்றோலிய வாயு விற்பனையிலும் சந்தைப்படுத்தலிலும் சந்தை முன்னோடியாக லிட்ரோ காஸ் லங்கா லிமிட்டெட் (LGLL) செயற்படுகிறது. இணை நிறுவனமான லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா பிரைவட் லிமிட்டெட் உடன் இணைந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. 

லிட்ரோ காஸ் வர்த்தக நாமத்தின உரிமையாண்மையை நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த தனது 5000 விற்பனை மையங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பு நியமங்களைக் கடுமையாக பேணுவதற்காக லிட்ரோ காஸ் நன்மதிப்பைக் கொண்டுள்ளது. கம்பனியின் கொள்கையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுகிறது.