20 வருடங்களாக ‘விடுமுறை’யில் இருந்த அரசாங்க வைத்தியர்!

Published By: Devika

08 Feb, 2017 | 11:37 AM
image

கர்நாடகாவில், அரசாங்க வைத்தியர் ஒருவர் கடந்த இருபது வருடங்களாக விடுமுறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சுகாதாரத்துறை ஆணையர் சுபோத் யாதவ்வின் பணிப்பின் பேரில் அரசாங்க வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் வருகைப் பதிவேடுகளை ஆராய்ந்தபோதே இந்த ‘பகீர்’ தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவின் பெரும்பாலான கிராமப்புறப் பகுதிகளில் இயங்கும் வைத்தியசாலைகள் மற்றும் நகரங்களில் இயங்கும் சில வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் சிலர் உரிய அனுமதி இல்லாமல் விடுமுறையில் செல்வதாக சுகாதாரத்துறையில் அடிக்கடி முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதில், ஒரு பெண் வைத்தியர் 1997ஆம் ஆண்டு முதல், சுமார் இருபது வருடங்களாக, அனுமதி இல்லாமலேயே விடுமுறையில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 2000ஆம் ஆண்டு முதல், கடந்த பதினாறு வருடங்களாக ஒரு வைத்தியர் விடுமுறையில் இருந்து வந்திருக்கிறார்.

இவர்களைப் போலவே 103 வைத்தியர்கள் அனுமதி இல்லாமலேயே விடுமுறையில் சென்றிருக்கின்றனர். எனினும் இவர்களில் ஒருவரேனும் பணிநீக்கம் செய்யப்படவில்லை.

தம்மிடம் அளிக்கப்பட்ட இந்த அறிக்கையையடுத்து 83 வைத்தியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்திருக்கிறார் யாதவ். ஏனையவர்களிடம் விளக்கம் கோரி கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10