சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரது இல்லத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். 

அ.தி.மு.க.விக்கு எந்த நிலையிலும் நான் துரோகம் செய்யவில்லை. பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டான் என ஒருபோதும் ஏற்பட்டதில்லை. இராஜினாமாவை திரும்பப் பெறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டால் திரும்பப் பெறுவேன். ஆளுநர் சென்னை வந்ததும் அவரை சந்திப்பேன். சட்டமன்றம் கூடும்போது எனக்கான ஆதரவு தெரியவரும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அ.தி.மு.க.வுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில் 2 முறை முதல்வராக இருந்துள்ளேன்.  என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும்.

மற்றொரு வினாவிற்கு விடையளித்த அவர்,

ஜெயலலிதாவின் மரணம் குறித்து  மக்களுக்குள்ள சந்தேகங்களைப் போக்கும் வகையில், பணியிலுள்ள நீதியரசர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தகவல் : சென்னை அலுவலகம்