இரண்டாம் உலகப் போரின்போது விழுந்து வெடிக்காத குண்டு; மக்கள் தற்காலிக இடப்பெயர்வு

Published By: Devika

07 Feb, 2017 | 04:49 PM
image

கிரீஸில், இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது விழுந்து வெடிக்காத குண்டொன்றை அப்புறப்படுத்துவதற்காக சுமார் அறுபதாயிரம் பேர் தற்காலிகமாக இடம்பெயரவேண்டிய சூழல் எழுந்துள்ளது.

கிரீஸின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான தெஸ்ஸாலோனிக்கி என்ற நகரில், இரண்டாம் உலக யுத்தத்தின்போது விழுந்து வெடிக்காத குண்டொன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. இதை அப்புறப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியைச் சுற்றிலும் சுமார் 2 கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில் உள்ள சுமார் அறுபதாயிரம் பேரை தற்காலிகமாக அப்புறப்படுத்த அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.

தெஸ்ஸாலோனிக்கியின் மத்தியி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், எரிபொருள் தாங்கிகளைப் பொருத்தும் பணிகளின்போதே, நிலத்துக்கடியில் சுமார் ஐந்து மீற்றர் ஆழத்தில் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

எதிர்வரும் ஞாயிறன்று இந்த குண்டு அகற்றப்படவுள்ளதாகவும், இதற்காக அப்பகுதி மக்கள் அனைவரும் சுமார் ஐந்து மணிநேரம் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52