'நான் எமன் பேசுகிறேன், உன்னை கொலை செய்யப்போகிறேன்" : துப்பாக்கி சூட்டில் தப்பிய சைட்டம் அதிகாரி கருத்து

Published By: Robert

07 Feb, 2017 | 04:54 PM
image

நான் எமன் பேசுகிறேன். உன்னை கொலை செய்யப் போகின்றேன் என தனக்கு மர்ம நபர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அதற்கு தான், எமனை பார்க்க தனக்கும் ஆசையாக உள்ளது என பதிலளித்ததாகவும் துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பிய மாலபே தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தின் (சைட்டம்) பிர­தான நிறை­வேற்று அதி­காரி வைத்­தியர் சமீர சேனா­ரத்­ன தெரிவித்தார்.

சமீர சேனா­ரத்ன நேற்றிரவு பல்­க­லையில் இருந்து வீடு திரும்பும் போது, கல்­லூ­ரியில் இருந்து சுமார் 750 மீற்றர் தூரத்தில் உள்ள சந்­தி­ரிகா குமா­ர­துங்க மாவத்­தைக்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்து இரு இனந்தெரியாத நபர்கள் துப்­பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

சைட்டம் நிறுவனத்தில் இருந்து விலகுமாறும் இல்லா விட்டால் கொலை செய்யப்படுவேன் என எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இதேவேளை வழக்கு தீர்ப்பின் பின்னர் எனக்கு எதிரான அச்சுறுத்தல் மேலும் அதிகரிக்கப்பட்டது.

இறுதியாக தொலைப்பேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய நபர் “நான் எமன் பேசுகிறேன்.  உன்னை கொலை செய்ய போகிறேன் என அச்சுறுத்தல் விடுத்தார்.

எமனை பார்க்க எனக்கும் ஆசை என நானும்; பதிலுக்கு சிரித்தவாறு தெரிவித்தேன்.

 தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த தொலைபேசி இலக்கங்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளேன்.

பல்­க­லையில் இருந்து வீடு திரும்பும் போது, முகத்தை முழு­மை­யாக மூடும் வகை­யி­லான தலைக்­க­வசம் அணிந்து மோட்டார் சைக்­கிளில் வந்த  இரு நபர்கள் இந்தத் துப்­பாக்கிப் பிர­யோ­கத்தை நடத்­தி­விட்டுச் தப்பிச் சென்றனர்.

இதனால் எனக்கு எந்த காயங்­களும் ஏற்­ப­ட­வில்லை.  துப்­பாக்கிச் சூடு கார­ண­மாக தனது காருக்கு சிறிய சேதங்கள் ஏற்­பட்­டுள்­ள­து என்றார்.

 சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த அவர் நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04