வில்பத்து விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களை பார்த்து அதிகாரி ஒருவர் கழுதை என்று தெரிவித்தமையால் ஊடகவியலாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வில்பத்து விவகாரம்“ தொடர்பில் தெளிவூட்டுவதற்காக தேசிய தொழில் சங்கம் முன்னணி  ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் ஊடகவியலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. மேலும்,குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு மருதானை சனச சமூக நிலையத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.