இந்தியாவின் சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான கைலாஷ் சத்தியார்த்தியின் நோபல் பரிசு திருடுபோயுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் கைலாஷ் சத்தியார்த்தி. பாகிஸ்தானின் மலாலாவுடன் இந்தப் பரிசை அவர் பகிர்ந்துகொண்டார். 

இந்நிலையில், இன்று (7) அதிகாலை டெல்லியில் அவரது வீட்டை உடைத்துக்கொண்டு புகுந்த திருடர்கள் அங்கிருந்த நோபல் பரிசைத் திருடிச் சென்றுள்ளனர். நோபல் பரிசுடன் வைக்கப்பட்டிருந்த சான்றிதழ்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து சத்தியார்த்தியிடம் இருந்து இதுவரை எதுவிதமான கருத்தும் வெளியிடப்படவில்லை.

திருடர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.