200 கோடீஸ்வரர்களும் 91 குற்றவாளிகளும் போட்டியிடும் தேர்தல்!

Published By: Selva Loges

07 Feb, 2017 | 01:31 PM
image

தேர்தல் ஒன்றில் 200 கோடீஸ்வரர்களும், 91 குற்றவாளிகளும் போட்டியிடும் சம்பவம் இந்தியாவில் இடம்பெறுகின்றது. 

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெற உள்ளது. மாநிலத்தின் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்கு பதிவுகள் இடம்பெறவுள்ளது.

குறித்த தேர்தலில் போட்டியிடும்  637 வேட்பாளர்களில் 200 பேர் கோடீஸ்வரர்கள், 91 பேர் மீது பாரிய குற்றங்களுக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன.  என இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் குறித்த 91 பேரில் 54 பேர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, கடத்தல், கற்பழிப்பு போன்ற கடுமையான குற்றச்சாட்டுகலும், ஏனையோர் மீது ஆள்மாறாட்டம் மற்றும் ஊழல் வழக்குகளும் உள்ளன. 

குறித்த மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதோடு, அங்கு வேட்பு மனுதாக்கல் முடிந்து தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. பி.ஜெ.பி  மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய வேட்பாளர்களில் பி.ஜெ,பியினர் சார்பாக 19 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பாக 17 பேரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right