மீகம - வெலிபன்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

டிப்பர் ரக வாகனமொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இன்று மாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.