நாட்டின் பிரதான மாவட்டங்களுக்கு தனது மூக்குக்கண்ணாடி சேவைகளை விஸ்தரிப்பது எனும் திட்டத்தின் பிரகாரம் கம்பஹா, குளியாப்பிட்டிய, நீர்கொழும்பு, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் Vision Care தனது புதிய கிளைகளை அங்குரார்ப்பணம் செய்திருந்தது.

இதன் மூலம் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் தான் கொண்டுள்ள கிளை எண்ணிக்கையை 39 ஆக அதிகரித்துள்ளது.

Vision Care தனது விஸ்தரிப்பு செயற்திட்டத்தினூடாக நிறுவனத்தின் சேவைகள் பற்றிய விழிப்புணர்வை விஸ்தரித்து வருவதுடன், தமது கண்பார்வை தீர்வுகள் பற்றிய தெரிவுகளையும் தொடர்ச்சியாக விநியோகித்த வண்ணமுள்ளது.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பிரசன்னத்தைக் கொண்டிருப்பது எனும் எதிர்பார்ப்புடன் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் Vision Care எனும் வர்த்தக நாமத்திலமைந்த தயாரிப்புகளை நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்தவர்களுக்கும் அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதையும் நோக்காக கொண்டுள்ளது.

Vision Care பொது முகாமையாளர் ஹர்ஷ மதுரங்க கருத்துத் தெரிவிக்கையில்,

“கண்பார்வை தீர்வுகள் எனும் போது ஒவ்வொரு குடிமகனும் அந்த உரிமையை கொண்டுள்ளனர் என்பதை Vision Care உறுதி செய்வதுடன் இதன் காரணமாக எம்மால் நடமாடும் வசதிகளை ஏற்படுத்த முடிந்திருந்தது. Vision Care சொந்த கட்டமைக்கப்பட்ட பயிற்சி நிலையத்தினூடாக, இன்றைய இளைஞர்களுக்கு கண் மற்றும் கேட்டல் பராமரிப்பு சேவைகள் தொடர்பான அறிவு மற்றும் அனுபவத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளளோம்.

எமது கற்கைகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு வெற்றிகரமாக தமது கற்கை பூர்த்தி செய்த பின்னர் Vision Care இல் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்கி அவர்களின் தொழில் வாழ்க்கையில் முன்னோக்கிய பயணத்துக்கான அடித்தளத்தை ஏற்படுத்துகிறோம்” என்றார்.

Vision Care இனால் இரு நடமாடும் சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்றன இவற்றினூடாக நாட்டின் பின்தங்கிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும். இதன் மூலம் Vision Care சேவைகள் அதன் வாடிக்கையாளர்கள் வசம் கொண்டு செல்லப்படுகிறது.

இலங்கையர்களுக்கு பார்வை மற்றும் கேட்டல் பராமரிப்பு தொடர்பான அதிசிறந்த தீர்வுகள் Vision Care ன் பிரிதொரு இயலுமையாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தமது கையிலுள்ள தொகைக்கமைய வெவ்வேறு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் தயாரிப்புகளின் தரம் தொடர்பில் அவர்களுக்கு Vision Care இனால் உறுதி மொழி வழங்கப்படும்.

Vision Care என்பது இலங்கையில் காணப்படும் மிகச் சிறந்த கண்பார்வை தீர்வுகள் வழங்குநராக திகழ்கிறது. தரம் வாய்ந்த வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட தயாரிப்புகளை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

இத்தயாரிப்புகள் சர்வதேச தரம் வாய்ந்தவையாக அமைந்துள்ளதுடன் தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்தனவாகவும் அமைந்துள்ளன. புத்தாக்கமான நவீன முறையை கையாள்வதுடன், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகள் கிடைக்கின்றமை உறுதி செய்யப்படும்.

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களை அறிமுகம் செய்யும் போது Vision Care ஒருபோதும் அதன் தரத்தில் குறை வைப்பதில்லை. இலங்கையில் Vision Care தனக்கென தனிநாமத்தை பதித்துள்ளது. உயர் தரம் வாய்ந்த பொருட்களில் மாத்திரம் கவனம் செலுத்தாது நுகர்வோருக்கு சகாயமான மற்றும் நேர்த்தியான விலைகளில் தயாரிப்புகளை வழங்குநர் எனும் நிலையையும் பதிவு செய்துள்ளது.