அகதிகள் முகாமிலிருக்கும் குழந்தைகளை கடத்தி, தங்கள் இயக்கத்திற்கு சார்பானவர்களாக மற்றும் நடவடிக்கைகளை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். 

குறித்த தீவிரவாத அமைப்பினரை அளிப்பதில் ரஷ்யா மற்றும்  அமெரிக்கா ஆகிய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில்,  தங்கள் இயக்கத்தை பலப்படுத்த அகதிகள் முகாம்களில் இருக்கும் குழந்தைகள் கடத்திவந்து, பலவந்தமாக ஐ.எஸ் அமைப்பிற்குள் சேர்க்கின்றனர் என சர்வதேச ஊடகமொன்று தகவல் பகிர்ந்துள்ளது.

குறித்த சிறுவர்கள் லெபனான் மற்றும் ஜோர்டான் அகதிகள் முகாமிலிருந்து, தனி கடத்தல் படையினரால் கடத்தி  வரப்படுவதாகவும், அவர்களுக்கான பாரிய நிதியை ஐ.எஸ் அமைப்பினர் கொடுப்பதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான அமைப்பான குக் வில்லியம் ஆய்வு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பாவிலிருந்து  இதுவரை 88,300 குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக  ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைப்பான யூரோபால் குறிப்பிட்டுள்ளது.

முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு உதவி செய்பவர்களை போல்,  ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் கடத்தல் பிரிவினர் முகாமிற்குள்ளிருக்கும்  குழந்தைகளை கடத்துவதாக குறித்த ஆய்வமைப்பினர் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.