நாளை உரிய பதில் கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்து உயிரை மாய்ப்போம் : கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை 

Published By: Priyatharshan

06 Feb, 2017 | 04:55 PM
image

நாளை (07,02,2017) மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் தமது போராட்ட வடிவம் மாறும் எனவும் தங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது கடந்த 31.01.2017 தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஏழாவது  நாளாக இன்றும் (06.02.2017) தொடர்கின்றது.


மேலும் நாளை பாராளுமன்ற அமர்வு நடைபெற இருப்பதனால் அங்கு இந்த விடயம் குறித்து பேசுவதாகாக பல பாராளுமன்ற உறுப்பினர்களும் உறுதி வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நாளை (07,02,2017)மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் தமது போராட்ட வடிவம் மாறும் எனவும் தங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்ப்பதற்கான வழியை மேற்கொள்வோமெனவும் போராடடத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 40 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்தி விமானப்படைத்தளம் அமைத்துள்ள விமானப்படையினர் அதனை பலப்படுத்தி வேலிகள் அமைத்து மக்கள்  செல்லமுடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 31 ஆம் திகதி காணிகள் அளவிடப்படும் எனவும் காணிகளுக்கு சொந்தமான மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வருமாறும் கேப்பாப்புலவு கிராமசேவகர் அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்திருந்தமக்கள் நாள்முழுவதும் வீதியில் காத்திருந்த போதும் அதிகாரிகள் எவரும் காணிகள் அளவிட வருகைதந்திருக்கவில்லை இந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அன்றையதினம் முதல் தாம் தமது சொந்த நிலங்களில் காலடி எடுத்து வைக்கும் வரை போராட்டம் தொடருமென கூறி தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் கடந்த 01.02.2017 அன்று  குறித்த போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட  அரச அதிபரும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரும் மற்றும் வன்னி பிராந்திய விமானப்படை தளபதியும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்து மக்களோடு கலந்துரையாடி சமரச முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் மக்கள் உறுதியான நிலைப்பாட்டில் தமது சொந்த நிலத்தில் காலடி எடுத்து வைத்தால்தான் இந்த போராட்டம்  நிறைவுபெறும் என கூறி தொடர்ந்து போராடி  வருகின்றனர்.



இந்த நிலையில் ஏழாவது  நாளாக இன்றும் இந்த மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. ஏழாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்துக்கு  பல மக்கள் பிரதிநிதிகளும் வருகைதருவதை அவதானிக்கமுடிகின்றது.



இந்த நிலையில் இன்றையதினம் (06.02.2017) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் வடக்குமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்ம ற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் வருகைதந்து மக்களுடன் கலந்துரையாடினர்.


அத்தோடு மக்கள் தமது உணவுகளை தாமே மரங்களுக்கு கீழே சமைத்து உண்டு வருகின்றனர். அத்தோடு இந்தப்போராட்ட்டக்  களத்தில் உள்ள மாணவர்கள் வீதி ஓரத்திலேயே தமது பாடசாலையில் வழங்கப்பட்ட  வீட்டு வேலைகளை செய்வதோடு அனைவரும் இணைந்து தமது  கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது.

அத்தோடு இன்று முல்லைத்தீவு கல்வி வலயத்திலிருந்து வந்த பிரதிக்கல்வி பணிப்பாளர் ஆதவன் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்ததோடு சில கற்பித்தல்களையும் மேற்கொண்டனர்.



அத்தோடு இன்றையதினம் இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்திற்கு விசேட மருத்துவக்குழு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலிருந்து வருகைதந்து சளி,இருமல் ,காய்ச்சல் போன்ற நோய்களாலும் ஏனைய நோய்களாலும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பெண்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்துகளும் வழங்கப்பட்டன.



மேலும் இந்த மக்களின் போராட்டம் வெற்றிபெற ஆசிவேண்டி கேப்பாப்புலவு முத்துவிநாயகர் ஆலயத்தில் உள்ள பூசாரி ஒருவர் தொடர் சிவ வழிபாட்டு பூசை ஒன்றினை இன்றுமுதல் ஆரம்பித்துள்ளார்.


அத்தோடு இரவு நேரங்களில் கடும் பனி பொழிந்துவருவதோடு அந்த பனிப்பொழிவிலும் மக்கள் திறந்த வெளியில் வீதியில் நனைத்தபடி உறங்குவதையும் வெயில் நேரத்தில் சிறுவர்கள் வீதியில் உள்ள மதகுகளின்  கீழ்  இருப்பதனையும்  அவதானிக்கமுடிகின்றது.

போராடத்தில் ஈடுபடும் மக்களுக்கான் உணவு  மற்றும் இதர உதவிகளை அயல் கிராம மக்களும் இளைஞர்களும் சிவில் சமூக அமைப்புகளும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33