இங்கிலாந்து சசெக்ஸ் கவுண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெத்தியூ ஹொப்டனின் திடீர் மரணம் இங்கிலாந்து கிரிக்கெட்  வட்டாரத்தை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

சகெக்ஸ் அணியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்தர போட்டியில் அறிமுகமான மெத்தியூ ஹொப்டன், அந்த அணிக்காக நடைபெற்ற 3 வகையான போட்டிகளிலும் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

வேகப்பந்து வீச்சில் சிறந்து விளங்கிய மெத்தியூ ஹொப்டன் தனது 22 வயதில் திடீரென மரணமடைந்துள்ளார்.

இவரது மரணம் குறித்து சசெக்ஸ் ஹவுண்டி அணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஹொப்டனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளோம். அவரை இழந்து வாடும் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹொப்டன் எவ்வாறு மரணம் அடைந்தார் என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.

இவரது மணரத்திற்கு சக விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.