சீனாவில் இடம்பெற்ற தீ விபத்தொன்றில் 18 பேர் உடல் கருகிப் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் சீஜியாங் மாகாணத்தில் உள்ள மசாஜ் நிலையத்திலேயே பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் 18 பேர் தீயில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் சீஜியாங் மாகாணத்தில் உள்ள தைவூ நகரிலேயே மசாஜ் நிலையம் இயங்கி வருகின்ற நிலையில் அங்கு ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.