அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில்  நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஒரு கிலோ நாடு 70 ரூபாவெனவும் ஒரு கிலோ சம்பா 80 ரூபாவெனவும் விற்கப்படுமென நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.