ஜெயலலிதாவின் வீட்டில் இருக்கும் யாருக்கும், தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில்  சசிகலா நடராஜன் அதிமுக கட்சியின் சட்டமன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த போது,‘ போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் தங்கி உள்ளவர்கள் எல்லாம் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை. 2016 மே மாதம் நடந்த தேர்தலில் மக்கள் ஜெயலலிதா ஆட்சி செய்ய வேண்டும் என்று வாக்களித்தார்களே தவிர, ஓ.பன்னீர் செல்வத்துக்கோ அல்லது ஜெயலலிதாவின் வீட்டில் இருப்பவர்களுக்கோ அல்ல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் தற்போதைய ஆட்சி வெளிப்படையாகவும், சட்டப்பூர்வமாகவும் இல்லை’ என்று தெரிவித்தார்.