மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட  தீ விபத்தில் குடியிருப்பொன்று சேதமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா வைத்தியசாலை சேவையாளர் ஒருவரின் குடியிருப்பே இன்று அதிகாலை  இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளது

குறித்த வீட்டில் யாரும் இல்லாத போது  தீடீரென தீ பற்றிய நிலையில் வீட்டினுள் இருந்த மின் உபகரணங்கள்  உட்பட வீட்டு உபகரணங்கள் சேதமாகியுள்ளன.

குறித்த தீயினை பொது மக்களும் பொலிஸாரும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென்றும், சேதவிபரம் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் .