ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 100 பேர் பலி.!

Published By: Robert

06 Feb, 2017 | 11:48 AM
image

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் ஏராளமானோர் பனிக்கட்டிக்குள் சிக்கி தவிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் மிகவும் உள்ளடங்கிய பகுதியான நூரிஸ்தான் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு தொடர்ந்து பனிச் சரிவுகள் ஏற்படுகின்றன. அதன் இடிபாடுகள் வீடுகளின் மீது சரிகின்றன. இதனால் வீடுகள் பனிக்கட்டிக்குள் மூழ்கி கிடக்கின்றன. ரோடுகளும் அடைபட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பர்க்மடல் மாவட்டத்தில் கிராமங்கள் முழுவதும் பனிக்கட்டிக்குள் மூழ்கி கிடக்கின்றன. இவை தவிர வடக்கு மற்றும் மத்திய ஆப்கானிஸ்தான் மாகாணங்கள் பனிச் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.

பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களில் 50 பேர் நூரிஸ் தான் மாகாணம் பர்க்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள்.

வடகிழக்கில் உள்ள படாக்ஷான் மாகாணத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவர். இவர்களது வீடு பனிக்கட்டிக்குள் சிக்கி அழிந்து விட்டது.

இன்னும் ஏராளமானோர் பனிக்கட்டிக்குள் சிக்கி தவிக்கின்றனர். எனவே, மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13