ஷியா இன மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியதால் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவுகள் மோசமடைந்தன.

கடந்த சனிக்கிழமை ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் என்ற ஷியா இனமதகுரு உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியாவில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் அவர்கள் குற்றவாளிகள் எனக் கூறி  அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரானுடனான ராஜதந்திர உறவுகள் முறித்துக் கொள்ளப்பட்டதை சவுதியின் வெளியுறவு அமைச்சர் அடேல்-அல்-ஜுபைர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து சவுதியிலுள்ள அனைத்து ஈரானிய தூதரக அதிகாரிகள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த மதகுருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராஜியத் தலைநகர் தெஹ்ரானிலுள்ள சவுதி தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.