எச்சரிக்கை .! புலிகள் மீண்டும் மீளிணைவு : பயங்கரவாத புலனாய்வாளர்களுக்கு தகவல்

Published By: Robert

06 Feb, 2017 | 10:20 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் மீள ஒருங்கிணைந்து செயற்பட திட்டமிட்டமை தொடர்பிலான பல்வேறு தகவல்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை ஒன்றூடாக வெளிப்படுத்தியுள்ளனர். 

கிளினொச்சியில் பாதைகைகளில் கடமையில் ஈடுபடும் பொலிஸாரை தாக்கி அவர்களது ஆயுதங்களை கொள்ளையிட்டு அதனூடாக தாக்குதல்களை நடத்துவது தொடர்பிலான தகவல்;களையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்திக்கொண்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பல தடவை முயற்சி செய்யப்பட்டுள்ள போதும் பொலிஸாரின் ஆயுதங்களை கொள்ளையிட அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அந்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதனைவிட கிளினொச்சியின் காடுகளில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களை மீளப்பெறும் நோக்கில் பல இடங்கள் தோண்டப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நடவடிக்கைகள் இரவு வேளையிலேயெ பெரும்பாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மீளுருவாகும் நோக்கில் முன்னாள் போராளிகள் சிலர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வல்லது எனவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09