கடந்த ஆட்சியில் பஷிலுக்கு தேவையான விதத்திலேயே தேர்தல்முறை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன

04 Jan, 2016 | 08:53 AM
image

கடந்த ஆட்­சியில் பஷில் ராஜ­ப­க் ஷ­விற்கு தேவை­யான விதத்­தி­லேயே தேர்தல் முறை மாற்­றங்கள் ஏற்­பட்­டது. எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடி­யாது. அனைத்துக் கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டே மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என தெரி­வித்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம், ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்பு மாற்­றத்தின் போது தலை­மைத்­துவ சபை நீக்­கப்­படும் என்றும் அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரி­விக்­கையில்,

புதிய தேர்தல் முறை மாற்றம் அனைத்துக் கட்­சி­க­ளு­ட­னும் பேசி ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மாறாக கடந்த ஆட்­சியில் பஷில் ராஜ­ப­க் ஷவின் தேவைக்­கா­கவே ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. எல்லை நிர்­ண­யங்கள், தொகுதி பிரிப்பு தொடர்­பாக பல பிரச்­சி­னைகள் உள்­ளன. சில இடங்­களில் தமக்கு தேவை­யான விதத்தில் கிரா­மங்கள் பிரிக்­கப்­பட்­டுள்­ளன.

வீட்டின் முன்­பக்கம் ஒரு தொகு­திக்கும், சமை­ய­லறை இன்­னொரு தொகு­திக்­கு­மென பிரிக்­கப்­பட்­டுள்­ளது.

இதில் இன, மத மற்றும் சிறு­பான்மை இன மக்கள் தொடர்­பாக சிந்­திக்­க­வில்லை. நாட்டில் மீண்டும் ஒரு பிரச்­சினை தலை தூக்கும் விதத்­தி­லேயே எல்லை நிர்­ண­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

எனவே இது தொடர்­பாக ஆராய்­வ­தற்கு அசோக பீரிஸ் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் அறிக்கை ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்கும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இவ் அறிக்­கையில் முன்­னைய தேர்தல் முறை மாற்றம் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே எல்லை நிர்­ணயம் மீள திருத்­தப்­பட வேண்டும். அதற்­க­மைய தேர்தல் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இதற்கு காலம் எடுக்கும். இதனை கார­ண­மாக வைத்து தேர்­தலை பின்­போ­டு­வது நியா­ய­மா­னது.

உள்­ளூ­ராட்சி தேர்­தல்கள் நடத்­தப்­பட வேண்டும், புதிய தேர்தல் முறை ஏற்­ப­டுத்­தப்­படும் வரை காத்­தி­ருக்­காது தற்­போ­துள்ள முறை­யி­லேயே தேர்­தல்கள் நடத்­தப்­பட வேண்டும்.

ஐக்­கிய தேசியக் கட்சியில் யாப்பு மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதோடு, பல புதிய பதவி மாற்றங்களும் செய்யப்படவுள்ளன. தலைமைத்துவ சபை தற்போது இயங்கு வதில்லை. எனவே அது இரத்து செய்யப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47