ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடைபெற்றால் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ விவரங்களை அளிக்க தயாராக இருக்கிறோம் என்று அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்திய இதய செயலிழப்பு சங்கம் மற்றும் அப்பல்லோ வைத்தியசாலை இணைந்து இதய செயலிழப்பு 360 டிகிரி என்ற தலைப்பில் மூன்றாவது ஆண்டு மாநாடு சென்னையில் நேற்று தொங்கியது. 

அதன்போது பங்குபற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவிதமான ஒளிவுமறைவும் இல்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த அனைத்து விவரங்களையும், எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயாராக இருக்கிறேன். ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை. அது வதந்தி” என்றார்.