மலையாள சூப்பர் ஸ்டாரும், பொலிவூட் சூப்பர் ஸ்டாரும் பிரம்மாண்ட படம் ஒன்றில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் மோகன்லால். அதேபோல், பொலிவூட் உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் அமிதாப் பச்சன். இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணையப் போவதாக சினிமா உலகில் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர்கள் இணையும் அந்த படமான மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்ரீகுமார் என்பவர் இயக்கப்போவதாகவும், இந்த படம் 3டி டெக்னாலஜியில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ‘ஒடியன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், இப்படத்தில் மோகன்லாலுக்கு அப்பாவாக அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.