டிரம்பின் தடை உத்தரவிற்கு தடை : அமெரிக்க நீதிபதியின் அதிரடி உத்தரவு 

Published By: Selva Loges

04 Feb, 2017 | 12:13 PM
image

பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் குறிப்பிட்ட ஏழு நாடுகளுக்கு தடைவிதித்த, அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவிற்கு எதிராக, நாடு தழுவியரீதியில் அமுலில் வரும்படியான தற்காலிக தடை உத்தரவொன்றை சியாட்டல் மாவட்ட மத்திய நீதிபதி தீர்ப்பாக வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி டிரம்பின் நிர்வாக உத்தரவிற்கு எதிராக செயற்படுவதற்கு, அமெரிக்க மாகாணங்களுக்கு சட்ட வரையறை இல்லையென அரச சட்டத்தரணிகள் கூறிவந்த நிலையிலும், சியாட்டல் மாவட்ட மத்திய நீதிபதி ஜேம்ஸ் ரொபர்ட் குறித்த நிர்வாக ஆணைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

டிரம்பின் உத்தரவிற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாரிய போராட்டங்கள் நடைபெற்றதோடு, அமெரிக்க விமானநிலையங்களில் குடிவரவு துறை அதிகாரிகளால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் குறித்த தடை உத்தரவு காரணமாக இதுவரை சுமார் 60 ஆயிரம் விசாக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

மேலும் அகதிகளை அனுமதிக்கும் திட்டத்திற்கு 120 நாட்கள் இடைநிறுத்தம், ஈரான், ஈராக், சிரியா, சூடான், லிபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு 90 நாட்கள் விசா வழங்குவது தடைபடுத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சியாட்டல் நீதிபதியின் உத்தரவினால், அமெரிக்கா செல்வதற்கு முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் செல்வதற்கான தடை, அத்தோடு குறிப்பிட்ட நாட்டவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்படுவதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17