தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கி­டை­யே­யான பேச்­சு­வார்த்­தைகள் "இலங்­கையில் முஸ்லிம் பிரி­வி­னை­வாதம்" தலை­தூக்க ஏது­வாக அமையும் என எச்­ச­ரிக்கை விடுக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாதம் இலங்­கையில் ஊடு­ருவும் அபாயம் உள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டது.

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்,

கூட்­ட­மைப்பு - முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டை­யே­யான பேச்­சு­வார்த்­தைகள் நாட்­டுக்கு ஆபத்­தா­கவே அமையும். கூட்­ட­மைப்பின் வடக்கு - கிழக்கு இணைப்­பிற்கு முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வதில் கூட்­ட­மைப்பு நாட்டம் காட்டும்.

இவ் விட­யத்தில் கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் நிர்­வாக அல­கிற்கு கூட்­ட­மைப்பின் ஆத­ரவை முஸ்லிம் காங்­கிரஸ் கேட்­ப­தோடு, அதற்கு கூட்­ட­மைப்பும் வடக்கு கிழக்கு இணைப்­பிற்கு ஆத­ரவைப் பெற்றுக் கொண்டு முஸ்லிம் காங்­கி­ரஸின் தேவையை நிறை­வேற்றும். இதனால் கிழக்கில் முஸ்லிம் பிரி­வி­னை­வாதம் தலை­தூக்கும்.

ஏற்­க­னவே கிழக்கில் முஸ்லிம் அமைப்­பிற்கு இரா­ணுவப் பயிற்சி வழங்­கப்­பட்­டது எமக்கு நினை­வி­ருக்­கின்­றது. இந்த நிலையில் முஸ்லிம் நிர்­வாக அலகு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வது முஸ்லிம் பிரி­வி­னை­வா­தத்­திற்கு சாத­க­மாக அமையும். அதுமட்டுமல்லாது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவும் ஆபத்தும் இருக்கின்றது என்றார்.