மோச­மான ஆட்சிக் காலத் தைத் தோற்­க­டித்து நல்­லாட்சி அர­சாங்கம் அதி­கா­ரத்­திற்கு வந்து இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யான நிலையில் கால­னித்­துவ ஆட்­சி­யி­லி­ருந்து சுதந்­தி­ரத்தின் 69 ஆவது வருடப் பூர்த்­தியைக் கொண்­டா­டு­கின்ற இன்­றைய நாள் தனிச்­சி­றப்பு மிக்கதாகும் என ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். 

நாடு என்ற வகையில் நாம் பெற் றுக் கொண்ட சுதந்­தி­ரத்தை மிகவும் அர்த்­த­முள்­ளதாய் ஆக்கிக் கொள்­வது நம் அனை­வ­ரி­னதும் பொறுப்­பாகும். தற்­போ­தைய அர­சாங்கம் நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் பொரு­ளா­தார, சமூக, ஆன்­மீக, சுதந்­திரம் தொடர்­பாக மிகுந்த பொறுப்­புடன் செயற்­ப­டு­கி­றது என்றும் பிர­தமர் தெரி­வித்­துள்ளார்.  

இலங்­கையின் 69 ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே பிர­தமர் இவ்­வாறு கூறியுள்ளார்.

அவ்­வாழ்த்துச் செய்­தியில் பிர­தமர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது;

கடந்த இரண்டு வருட காலப்­ப­கு­தி­யினுள் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்தல், நட்­பு­ற­வான சர்­வ­தேசத் தொடர்­பு­களை மேம்­ப­டுத்தி பரஸ்­பர நம்­பிக்­கையை வெற்றி கொள்­ளுதல், இன, சமய பேதங்­களைத் தாண்­டிய மனித நேய­மிக்க அமை­தி­யான நாடொன்றைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான அடிப்­ப­டையை உரு­வாக்கல், நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை ஸ்திரப்­ப­டுத்­து­வ­தற்­கான முக்­கிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளுதல் போன்ற பல வெற்­றி­களை எம்மால் பெற்றுக் கொள்ள முடிந்­தது. அபி­மானம் மிக்க ஓர் தேச­ 

மாக ஒன்­றி­ணைந்த இலங்கை மக்­க­ளாக எதிர்­கா­லத்தில் முன்­னோக்கிச் செல்­வ­தற்­காக சுய­ந­லத்தை ஒதுக்கி விட்டு நாட்­டிற்­காகப் பாடு­பட்டு உழைப்­பதே எமக்­குள்ள சவா­லாகும். அந்த சவாலை வெற்றி கொள்ள துணிச்சலுடனும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட இந்த சுதந்திர தினத்தில் விசேடமாக உறுதி பூணுவோம்.