தேசிய ஒற்றுமை எனும் தொனிப்பொருளில் இலங்கையின்  69 ஆவது சுதந்திர தினம் இன்று ஜனாதிபதி  மைத்திரபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலின்  இடம்பெற்றுவருகின்றது. பிரதமர்,அமைச்சர்கள் முப்படை பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதுடன் 8000 படை வீரர்கள் பங்குபற்றலுடன் இராணுவ அணிவகுப்பு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

இன ஒற்றுமை  மற்றும் ஐக்கியத்தை பிரதிபலிக்கும் வகையில் "தேசிய ஒற்றுமை" எனும் தொனிப்பொருளில் இலங்கையின்  69 ஆவது சுதந்திர தினம் இன்று ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் நடைபெறுகின்றது.

கொழும்பி காலி முகத்திடலில் நடைபெறும் இந்த நிகழ்வு காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி சர்வமத தலைவர்களின் மத வழிபாடுகளுடன் ஆரம்பித்து  நிகழ்வில் காலை 7.55 மணிக்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் இலங்கையின் தேசியக்கோடி ஏற்றிவைக்கப்பட்டது.

இன்றைய சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், வெளிநாட்டு பிரதிநிதகள் மற்றும் முப்படை பிரதானிகள், தளபதிகள், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று  காலை கொழும்பு பொல்வத்த தர்மகீர்த்தியாராம விஹாரையில் பௌத்த மத அனுஷ்டானங்களும் கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இந்து மத அனுஷ்டானங்களும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இஸ்லாமிய பிரார்த்தனைகளும் திம்பிரிகஸ்யாய தெரேசா தேவாலயத்தில் கத்தோலிக்க மத ஆராதனைகளும் பொரள்ள சென் லூக் தேவாலயத்தில் கிறிஸ்தவ ஆராதனைகளும் இடம்பெற்றன.