இந்­தி­யா­வுடன் "சீபா" உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­ப­ட­மாட்­டாது. அதற்குப் பதி­லாக வர்த்­தக தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக சபை முதல்­வரும், அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­விக்­கையில்,

இந்­தி­யா­வுடன் சீபா (பரந்த பொரு­ளா­தார உடன்­ப­டிக்கை) கையெ­ழுத்­தி­டப்­படப் போவ­தா­கவும். இதனால் இலங்­கையை இந்­தியா ஆக்­கி­ர­மித்­து­விடும் என்றும் பிர­சா­ரங்கள் செய்­யப்­ப­டு­கின்­றன. இதில் உண்­மை­யெ­து­வு­மில்லை. இது தொடர்­பாக பிர­தமர் ரணில்­ விக்­கி­ரமசிங்க பாரா­ளு­மன்­றத்தில் தெளி­வான அறிக்­கை­யொன்றை விடுத்தார்.

தனது இந்­திய விஜ­யத்தின் போது சீபா உடன்­ப­டிக்கை தொடர்­பாக பேசப்­ப­ட­வில்லை. அவ் உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­ப­ட­மாட்­டாது என்றும் தெரி­வித்தார்.

தேசப்­பற்று தொடர்­பாக பேசும் உதய கம்மன்­பில போன்றோர் எமது நாட்டுப் பிர­த­மரின் கருத்தை நம்­பாது வெளி­நா­டு­களில் கருத்­துக்­க­ளுக்கு முத­லிடம் வழங்­கு­கின்­றார்கள். இந்­தி­யா­வுடன் வர்த்­தக மற்றும் தொழில்­நுட்ப உடன்­ப­டிக்­கைதான் கையெ­ழுத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. இது தொடர்­பாக பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றது.

எனவே இந்­தி­யா­வுடன் நட்­பு­றவை சீர்­கு­லைப்­ப­தற்கு உள் நாட்­டி­லுள்ள சில தீய சக்­திகள் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றன என்றார்.

இதே­வேளை இலங்கை, இந்­தியா இடை­யே­யான (ETCA) வர்த்­தக தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை தொடர்­பான நகல் பெப்ரவரி மாதம் கையெழுத்திடப்படவுள்ளது. இது

தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தியாவுக்கு செல்லவுள்ளதாகவும் அறிய வருகிறது.