அனைத்து விடயங்களையும் தகவல் அறியும் சட்டமூலம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் ; அரசாங்கம்

Published By: Priyatharshan

03 Feb, 2017 | 04:30 PM
image

(ஆர்.யசி )

தேசிய பாதுகாப்பு தகவல்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் விபரங்கள் மற்றும் அரச இரகசியங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களை தகவல் அறியும் சட்டமூலம் மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில்  தகவல் அறியும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை உரிய மொழியில் கோரும் போது அது தொடர்பான தகவல் வழங்கும் அதிகாரிகள் தகவல்களை வழங்க தவறின் அது தொடர்பாக தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கோ அல்லது அதன் மேன்முறையீட்டு குழுவுக்கோ முறையிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

தகவல் அறியும் சட்டமூலம் கொண்டுவருவதன் மூலம்  நாட்டின் தகவல் உரிமையை கொண்டுவருவோம் என  உருதியளித்தோம். அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

இதன்மூலம் அரசாங்கம் மற்றும் அரசாங்க நிறுவனங்கள்  நிதியை பயன்படுத்தும் விதம், தீர்மானங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இது தொடர்பான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படவுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான  கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55