வலஸ்முல்ல - போவல பகுதியில் கொலை சம்பவமெொன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் 12 வருடங்களுக்கு பிறகு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் 77 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 1992 ஆம் ஆண்டு மித்தெணிய - முருதவெல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பில் குறித்த நபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.