அமெரிக்க தடையை நீக்க கோரும் ஐ.நா செயலாளர் 

Published By: Selva Loges

03 Feb, 2017 | 12:38 PM
image

ஏழு முஸ்லீம் நாடுகளுக்கெதிராக டிரம்ப் விதித்துள்ள விசா தடை உத்தரவை அவர் நீக்கவேண்டும். என ஐ.நா. பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 

 ஈரான், ஈராக், சிரியா, சூடான், லிபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட ஏழு முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள விசாத்தடைகள் பற்றி ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ், சர்வதேச ஊடகங்களுக்கு அளித்துள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த விடயம் பற்றி பேசியுள்ள அவர்,  ‘7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை விதித்திருப்பது  தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்றும் சிறந்த வழியாக கருத முடியாது. மாறாக குறித்த மக்களுக்கு கோபத்தையும், கவலையையும் அதிகரிக்க செய்யும்.

அத்தோடு மேற்கண்ட நாடுகளை சேர்ந்த மக்கள் மற்றும் அகதிகள் நுழையாமல் தடுப்பதன் மூலம் மட்டும் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க முடியாது. ஏனெனில் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்த வரும் தீவிரவாதிகள் சட்ட பூர்வமாக நாட்டினுள் நுழைய மாட்டார்கள்.

அதனால் அம்மக்கள் மீதான தடையை நீக்க வேண்டுமென்பது தனது கருத்தெனவும், டிரம்ப் தீவிரவாத தாக்குதல்களை தடுப்பதற்கு தெரிவு செய்துள்ளது சரியான வழியல்ல என ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13