பிளாஸ்திக் பொருட்கள் எமது முழு உடலையும் கடுமையாகப் பாதிக்கும் ஆபத்தான இரசாயனப் பொருட்களைக் கொண்டுள்ளன என்று Believers in glass அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொதியிடல் முறைமையானது, புற்றுநோய், நீரிழிவு, மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடுகள் மற்றும் அஸ்மா போன்று பல்வேறு சுகாதாரரீதியான பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதெனவும் அவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

எவற்றை உண்கின்றோம் எதனை அருந்துகின்றோம் என்பதில் நாம் மிகக் கவனமாக உள்ளோம். ஆனால் அவை எங்கு வைத்துப் பேணப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்த மறந்துபோகின்றோம்.

பொதியிடல் முறைமையானது, புற்றுநோய், நீரிழிவு, மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடுகள் மற்றும் அஸ்மா போன்று பல்வேறு சுகாதாரரீதியான பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த நிலைமையானது எமது நாட்டிலும் அபாயமான கட்டத்தை எட்டியுள்ளது. எமது நாட்டில் சராசரி வெப்பநிலையானது 30-35 பாகை செல்சியஸ் ஆக இருக்கும் நிலையில், பிளாஸ்திக்கிலிருந்து ஆபத்தான இரசாயனங்கள் வெளிவருவது நேரம் மற்றும் வெப்பநிலையில் தங்கியுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளதைக் கருதுகையில், பிளாஸ்திக் கொள்கலன்களில் உணவு, தண்ணீர் மற்றும் மருந்து வகைகளை மிக நீண்ட நேரத்திற்கு வைத்துப் பேணும் போது அவற்றில் இரசாயனத் தாக்கமும் அதிகமாகின்றது.

“எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலமாக, கனமான பொருட்களில் ஆபத்தான நச்சுக்களின் அளவானது அனுமதிக்கப்பட்ட மட்டங்களிலும் பார்க்க கணிசமான அளவில் மிக அதிகமாக உள்ளதுடன் அத்தகைய மட்டங்களில் உணவுகளை உட்கொள்வதென்பது என்பது நஞ்சை உள்ளெடுப்பதற்கு ஒப்பானது அல்லது அதை விடவும் மோசமானது எனக் கருதப்படுகின்றது.

எமது நாட்டில் முறையான குளிர் சங்கிலி மற்றும் களஞ்சியப்படுத்தல் முறைமை காணப்படாமை, இப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகின்றது” என இலங்கை இரசாயனவியல் நிலையத்தின் செயலாளரான வைத்தியர் ஏ ஏ பீ கீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

உண்மை என்னவெனில், இத்தகைய பிளாஸ்திக் போத்தல்கள், 20 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலேயே அவற்றில் வைத்துப் பேணப்படும் போது அனுமதிக்கப்படக்கூடிய phthalates, antimony, acetaldehyde போன்றவற்றிற்கான சோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

எமது நாட்டைப் போன்று அதிக வெப்பநிலை நிலவுகின் நாடுகளில், இரசாயனப் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பு, அனுமதிக்கப்பட்ட மட்டத்திலும் பார்க்க 4 மடங்கு அதிகரிக்கக்கூடும். நீண்ட காலத்திற்கு (120 நாட்களுக்கு மேலாக) வைத்துப் பேணும் போதும் ஆபத்தான நச்சுப்பொருட்கள் சேர்கின்றன.

ஆகவே நீண்டகாலத்திற்கு பிளாஸ்திக் கொள்கலனில் வைத்துப் பேணுகின்ற பழக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். BPA போன்ற அதிசிறந்த பாதுகாப்பானவை எனக் கருதப்படுகின்ற பிளாஸ்திக் கூட ஆபத்தான இரசாயனங்களை வெளியேற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பான பிளாஸ்திக் என்று எதுவுமே கிடையாது.

மனிதனுக்கு தீங்கற்றவை என்று எந்த பிளாஸ்திக்கும் கிடையாதென சர்வதேசரீதியான ஆராய்ச்சிகள் மூலமாக எவ்விதமான சந்தேகங்களுமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் இளம் பராயத்தில் உள்ளபோது எமது வளர்ச்சிக்கும் ஈற்றில் இனப்பெருக்க ஆற்றலுக்கும் உதவுகின்ற ஒரு ஹோர்மோனான ஈஸ்ட்ரஜனின் தலையீடு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இவ்வாறு வெளிப்படும் இரசாயனங்கள் இரத்தம், சிறுநீர், பனிக்குடநீர் மற்றும் முலைப்பால் ஆகியவற்றில் பரவலாக கண்டறியப்பட்டுள்ளதுடன், இச்சோதனையை மேற்கொண்ட வளர்ந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் என கிட்டத்தட்ட அனைவரிடமும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறுபட்ட காரணங்களால் கருக்கள், மழலைகள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் தற்போதைய பாதிப்பு மட்டங்கள் தொடர்பில் விஞ்ஞானிகள் அக்கறை கொண்டுள்ளதுடன் அது ஆண்மைச்சுரப்பி மூளை, விதைப்பைகள் மார்பகங்கள் மற்றும் நடத்தையைப் பாதிக்கின்றதா என்பது தொடர்பிலும் கவலை கொண்டுள்ளனர்.

கருவில் இருக்கும் ஒரு குழந்தை அதிகமாக ஈஸ்ட்ரஜன் தாக்கத்திற்கு உள்ளாகும் போது வாழ்க்கையின் பிற்பகுதியில் மார்பக, விதை மற்றும் ஆண்மைச்சுரப்பி புற்றுநோய் ஆபத்தை அதிகமாகக் கொண்டுள்ளனர் என ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.

சமூகம் மற்றும் சூழலைப் பொறுத்தவரையில் கண்ணாடியே ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான பொதியிடல் வடிவம் என Believers of Glass அமைப்பு நம்புவதுடன் கண்ணாடியானது 100 வீதம் மீள்சுழற்சி செய்யப்படக்கூடியது என்பதே அதற்கான பிரதான காரணமாகும்.

எமது உணவு, தண்ணீர் மற்றும் மருந்து வகைகளை பொதியிடல் செய்வதைத் தெரிவுசெய்வது எமது அடிப்படை உரிமையாகும். மிகவும் பாதுகாப்பான பொதியிடல் பாவனைக்கு கண்ணாடியே மிகச் சிறந்த தெரிவென நாம் நம்புவதுடன் அது எல்லோருக்கும் கிடைப்பதற்கும் வழிசெய்ய வேண்டும்.